கடந்த ஆண்டில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 136.5 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது என இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 136.5 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2021-ஆம் ஆண்டில் 133 கோடி கிலோவாக இருந்தது.
மதிப்பீட்டு ஆண்டில் தேயிலை உற்பத்தி வட இந்திய தோட்டங்களில் 113.33 கோடி கிலோவாகவும், தென்னிந்தியத் தோட்டங்களில் 232 கோடி கிலோவாகவும் இருந்தது.
2023-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் 3 மாதங்களில் தேயிலை உற்பத்தி 7.9 கோடி கிலோவாக உள்ளது.
எனினும், 2022-ஆம் ஆண்டின் இதே மாத தேயிலை உற்பத்தியோடு ஒப்பிடுகையில் இது 8.28 கோடி கிலோ குறைவாகும். அப்போது நாட்டின் தேயிலை உற்பத்தி 9.32 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தேயிலை உற்பத்தித் தொழில் தற்போதைய பருவத்தில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாக உற்பத்தியாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.