ஜி.வி.பிரகாஷின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகனான ஜி வி பிரகாஷ் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே தாய்மாமாவின் தோள்களில் இசைப் பழகியவர்.

ஜென்டில்மேன் படத்தில் வரும் சிக்குபுக்கு ரயிலே பாடலின் மூலம் ஜிவி பிரகாஷின் குரலை உலகறியச் செய்தார் ரஹ்மான். அதன் பிறகு 90களில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் அத்தனை படங்களிலும் சிறுவர்களுக்கான குரலுக்கு ஜிவி பிரகாஷைத் தான் பயன்படுத்தியிருப்பார்.

சிறுவயதிலேயே மாமாவின் இசையில் பாடம் கற்ற ஜிவி பிரகாஷ் பின் தனது திரை இசைப்பயணத்தின் தனியாக பயணிக்கத் தொடங்கியது வசந்தபாலனின் வெயில் படம் மூலம் தான்.

ஷங்கரின் உதவி இயக்குநரான வசந்தபாலன் தான் இயக்கும் முதல் படத்துக்கு ஜி வி பிரகாஷ்குமாரை இசையமைக்க வைத்து அறிமுகம் செய்தார்.

அன்று முதல் இன்று வரை ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வெளியான சூப்பர் ஹிட்டான பாடல்களின் தொகுப்பு…

பூக்கள் பூக்கும் தருணம்

ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் அன்று முதல் இன்று வரை அனைவரது ஃபேவரைட் பாடலாக இருக்கிறது.

வார்த்தை தேவையில்லை…
வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே
வேரின்றி விதையின்றி…
விண் தூவும் மழை இன்றி…
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே

நா முத்துக்குமாரின் இந்த வரிகளைக் கேட்கும்போது நம் காதுக்குள் தேனோடுவது போல இருக்கும்.

ரூப் குமார் ரத்தோட், ஜி வி பிரகாஷ் குமார், ஹரினி, ஆண்ட்ரியா என இணைந்து பாடிய இந்த பாடல் மிகவும் சிறப்பானதாக அமைந்திருக்கும்.

யார் இந்த சாலையோரம்

ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த தலைவா திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலும் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மீண்டும் நா முத்துக்குமார் வரிகளில் சிறப்பான இசையைக் கோர்த்து பாடலாக வடித்திருந்தார் ஜி வி பிரகாஷ்குமார்.

தீர தீர ஆசையாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிர்க்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்

– என முத்துக்குமாரின் வரிகளில் மெய்சிலிர்க்கலாம்.

யாரோ இவன்

உதயம் என்ஹெச் 4 படத்தில் இடம்பெற்றுள்ள யாரோ இவன் பாடல் இளைஞர்களை அதிகம் கவர்ந்த பாடல்களில் ஒன்று.

ஜிவி பிரகாஷும் சைந்தவியும் இணைந்து பாடிய இந்த பாடலையும் நா முத்துக்குமாரே எழுதியிருந்தார்.

உன் காதலில் கரைகின்றவன்…
உன் பாா்வையில் உறைகின்றவன்…
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்… ஆண் பாட, அதற்கு பெண் எப்படி பாடுகிறார் பாருங்கள்.

என் கோடையில் மழையானவன்…
என் வாடையில் வெயிலானவன்…
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

– என காதலி கண் அசைத்தால் போதுமே அதற்கு கட்டுப்பட்டு நடக்கும் ஆண் மகனின் ஆண்மைதான் உலகில் பெரியது.

இரவாக நீ

இது என்ன மாயம் எனும் பெயரில் படம் வந்தது கூட பலருக்கு இங்கு தெரியாது. ஆனால் இந்த பாடலை தன் மொபைலில் வைக்காத இளைஞர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பேமஸான பாட்டு இது.

இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா
தொலையும் நொடி
கிடைத்தேனடி
இதுதானோ காதல்
அறிந்தேனடி

என் ஜீவன்

ஹரிஹரனின் மெய்சிலிர்க்க வைக்கும் குரலில் என் ஜீவன் பாட்டைக் கேட்டு உருகாதவர்கள் யாரும் இருப்பார்களா? சைந்தவியும் இந்த பாடலில் தன் வித்தையைக் காட்டியிருப்பார்.

விடிந்தாலும் வானம்…
இருள்பூச வேண்டும்…
மடிமீது சாய்ந்து…
கதைபேச வேண்டும்…

முடியாத பார்வை…
நீ வீச வேண்டும்…
முழு நேரம் என்மேல்…
உன் வாசம் வேண்டும்

சில்லென ஒரு பனித்துளி
சண்டாளி
பிறை தேடும்
விழிகளில் ஒரு வானவில்
ஒரு பாதி கதவு

என  விரிவடையும் அவரது பயணங்கள் தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகள்.

– நன்றி முகநூல் பதிவு

You might also like