டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
ஒன்றிய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலினை சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு கோரினார். அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் உடனிருந்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேர்தலுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம்” என தெரிவித்தார். அதோடு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.