இயற்கை மருத்துவச் சிறப்பு மற்றும் மாமுனிவர் அகஸ்தியர் சொன்ன 6 ரகசியங்கள் பற்றிய படமாக “பெல்” தயாராகிவருகிறது.
பீட்டர் ராஜின் புரோகன் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட்புவன் இயக்கத்தில் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும் பழந்தமிழர்களின் மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றியும் பேசும் படமாக “பெல்” உருவாகியிருக்கிறது.
இப்படம் குறித்து இயக்குநர் வெங்கட் புவன், “பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியர், பாதுகாக்கப் படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச் சொல்லி அதைப் பாதுகாக்கவும் கட்டளையிட ரகசியங்ளைப் பாதுகாப்பதில் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடந்த போராட்டமே படத்தின் மையக்கதையாகும்.
நான்லீனியர் முறையில் காதல், குடும்பம், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் மிகச் சரியான விகிதத்தில் கலந்த கலவையாக அமைந்த படமாக பெல் இருக்கும்.
இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற படமாக இருக்கும். குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்” என்றார்.
இப்படத்திற்கு வெயிலோன் கதை வசனம் அமைக்க, பரணிக்கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராபர்ட் இசையமைத்திருக்கிறார்.
சென்சார் பணிகள் முடிவடைந்து ஜூனில் பெல் திரைப்படம் வெளியாகிறது