இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட ஒரே இந்தியர்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 25 கோடியை எட்டிள்ளது.

இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் 25 கோடி பேர் பின்தொடரும் ஒரே இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களில் போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (58 கோடி பேர்), அர்ஜென்டினா கால் பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி (46 கோடியே 40 லட்சம் பேர்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் கோலி உள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்ககாக 2 சதம், 6 அரைசதம் உள்பட 639 ரன்கள் குவித்து அசத்திய கோலி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக லண்டன் சென்றிருக்கிறார்.

-நன்றி தினத்தந்தி

You might also like