முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா, தனது பிறந்த நாளில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆவடி, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் – சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக இருக்கிறார்.
இந்த நிலையில் சிறுமி டானியா தனது 10-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
தனது பிறந்த நாளில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மருத்துவத்திற்கு உதவி செய்த முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், இந்த பாதிப்பு குறித்து செய்தி வெளியிட்ட ஊடகத்தினர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதோடு அம்மா, அப்பா மற்றும் எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக ஸ்டாலின் அங்கிள் ஐ லவ் யூ என அன்பு பொங்க கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.