கர்நாடக அரசியல்: மாநில சுயாட்சிக்கான புதிய பாதை!

கர்நாடக முதலமைச்சராகும் மானமிகு. சித்தராமையா அவர்களுக்கு வாழ்த்துகள்.
நிச்சயமாக பெரிய crisis manager D K Sivakumar. ஆனால் ஏன் பெரும்பான்மை எம்.எல்.ஏ. க்கள் சித்தராமையாவை ஆதரிக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் என்று பேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் எழுத்தாளரும் விமர்சகருமான விஎம்எஸ். சுபகுணராஜன்.

லிங்காயத்துகளின் ‘இந்துக்கள் இல்லை‘ என்ற கோரிக்கையை ஏற்றவர் சித்தராமையா. ஆனால் அதனால் உடனடியாக தேர்தல் பலன்கள் இல்லாத நிலையில் இப்போது அந்த தொகுதிகளில் பெரும்பான்மையை வென்றிருக்கிறது காங்கிரஸ். பல தொகுதிகளில் பாஜக டெபாசிட் காலி.

இருபெரும் ஜாதிகளின் (லிங்காயத்து – ஒக்கலிகா) அரசியலில் ஒரு மாற்று நிலைப்பாடு நிச்சயமாக உதவும். டிகேஎஸ் ஒக்கலிகா. சித்தராமையா இந்த பெரும்பான்மை ஜாதிகள் சாராதவர். பகுத்தறிவாளர், சமூகநீதி அரசியல்காரர்.

இன்று இன்னொரு இந்து நம்பிக்கைவாதி (DKS) தலைமை ஏற்பதை விட ஒரு ஜாதி – மத முத்திரையற்றவரால் ஆளப்படுவதே நல்லது. இப்போதைக்கு துணை முதல்வர், 2024 ல் DKS ஐ ஒன்றிய ஆட்சியின் தரமான துறை கொடுத்து சமாதானம் செய்யலாம்.

தென்மாநிலங்களில் சுயமரியாதை – பகுத்தறிவு – சமூகநீதிக் குரலுக்கு மூன்று முதல்வர்கள்.

தமிழ்நாட்டில் தளபதி ஸ்டாலின், கேரளத்தில் தோழர் பிரனாய் விஜயன், கர்நாடகத்தில் சித்தராமையா. மாநில சுயாட்சி முழக்கம் 2024ல் முன்னுரிமை பெறட்டும்.

You might also like