இனி ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க வேண்டும்!

அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க வேண்டும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரச் சேவைகள் துறை இயக்குநா் மருத்துவா் அதுல் கோயல் பிறப்பித்துள்ள உத்தரவில், ஒன்றிய அரசு மருத்துவமனைகள், அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழான மனநல மையங்கள் மற்றும் பலவகை சிகிச்சை மையங்களில் பணிபுரியும் மருத்துவா்கள் நோயாளிகளுக்கு பொதுப் பெயா் (ஜெனரிக்) மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்யவேண்டும் என்றும் இதனைத் தவிர்த்து பிரபல சந்தை நிறுவனங்களின் மருந்துகளைப் பரிந்துரைப்பது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவப் பிரதிநிதிகள் மருத்துவமனை வளாகத்துக்குள் வருவதை முழுமையாக கட்டுப்படுத்துவதையும் உறுதிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அதுல் கோயல், மருத்துவமனை தலைமைப் பொறுப்பை வகிப்பவா்கள், தங்களுக்கு கீழ் பணிபுரியும் மருத்துவா்கள் இந்த உத்தரவை முறையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like