நெருக்கடிகளால் இடம்பெயர்ந்த 7 கோடிப் பேர்!

ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

நெருக்கடியான சூழல் காரணமாக மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறி குறுகிய காலத்திற்குள் சொந்த நாட்டிலேயே வேறு வேறு இடங்களுக்கு குடியேறும் விவரங்களை நார்வே அகதிகள் கவுன்சில் மற்றும் ஐடிஎம்சி (IDMC) எனப்படும் கண்காணிப்பு மையம் ஆகியவை திரட்டி அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இதுவரை இல்லாத வகையில் 2022-ல் அதிகபட்சமான குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 7.1 கோடி மக்கள் உள்நாட்டிற்குள்ளே குடிபெயர்ந்து செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, உக்ரைன் போர், பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் ஆகியவை தான் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு, 6 கோடி மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு ஆளானர்கள் எனவும், அதற்கு முந்தைய ஆண்டு 3.8 கோடி மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like