பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிகெட் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கிது. தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 20 பந்துகளில் 31 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அவருடன் களமிறங்கிய மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா 18 பந்துகளில் 29 ரன்களை குவித்தார். மூன்றாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 103 ரன்களை குவித்தார்.

இறுதியில், 20 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பில் ரஷீத் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, தொடக்கத்திலேயே திணறியது.

குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரித்திமான் சகா, ஷுப்மன் கில் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களுடன் வெளியேறினார். கடைசி கட்டத்தில் ரஷீத் கான் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.

அவர் 32 பந்தில் 10 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், குஜராத் அணி 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது.  

You might also like