‘வடக்கன்’ – எளிய மனிதர்களின் படம்!

இயக்குநர் பாஸ்கர் சக்தி

இன்னைக்கு எல்லா இடத்திலும் வடக்கத்தியர்களைக் காண்பது சாதாரணமாக இருக்கு. எங்க ஊருக்குப் பக்கத்தில்கூட ஒரு மில்லில் வேலை பார்க்கிறவர்களில் அநேகம் பேர் வடக்கே இருந்து வந்தவங்கதான்.

ஒரு பெரிய சமூகமாக அவங்க நம்மகிட்ட வேலைப் பார்க்க வந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் அவங்களோட நமக்கு ஒரு முரண் இருந்துக்கிட்டே இருக்கு. இனம்புரியாத சினம் வருது.  இதை அரசியலாக, ஊடுருவலாக, நம்ம வேலைவாய்ப்பைக் குறைக்கிறவிதமாக பார்க்கிறிங்க.

இதை ஒரு கலைஞனாக, கிரியேட்டராக எப்படி அணுகுவது என்று இதில் முயற்சி பண்ணிப் பார்த்திருக்கேன். உணர்வுகளைக் கடத்துவது முக்கியம். எழுத்தாளனாக இருப்பதால் ஒரு சீன் எழுதினாலே, அதன் ரிசல்ட் உடனே எனக்குத் தெரிந்துவிடுகிறது.

எதைச் செய்கிறோம் என்பதில் தெளிவாக இருந்தேன். அத்தனை அபத்தங்களையும் அடிச்சு நொறுக்கி அன்பையும் அக்கறையையும் முன்வைக்கிற படம்.

எளிய மனிதர்களை வச்சு அதை உங்களுக்கு உணர்த்தும் இந்த ‘வடக்கன்.’

மனதோட வெளிச்சம்தான் மானுட வெளிச்சம்னு இன்னமும் நம்புறேன்.

ஒரு சினிமாங்கிறது இரண்டரை மணி நேரம்தான். ஆனால் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம்.

‘வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா’ங்கற விட்டோரியா டிஸிகாவோட கோட் எவ்வளவு உண்மை.

என்னோட சிறுகதைகளில் சீரியஸான விஷயத்தையும் காமெடியாகச் சொல்லிப் பார்க்கிற ஸ்டைல் இருக்கும். அதற்கான ஸ்கிரிப்ட் அமைந்த பிறகு அப்படியே எழுதிட்டேன்.

நகைச்சுவை எங்கெல்லாம் இருக்கோ அங்கே மனிதம் வந்து அப்படியே படுத்திருக்கும். சாப்ளினைவிட வாழ்க்கையின் அவலங்களை யாரும் இங்கே சொல்லிடலை. அதையும் மனதில் வச்சிருக்கேன்.”

–  நன்றி: நா. கதிர்வேலன் ஆனந்த விகடன்.

You might also like