ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல முயற்சி!

  • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 434வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்லினை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

அதிபர் புதினை கொலை செய்ய 2 டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

அதிபர் புதினை கொலை செய்ய நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறியுள்ள ரஷியா இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடந்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்றும் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷியா தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தக் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார்.

You might also like