தென்பெண்ணை விவகாரம்: ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்!

– உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி

தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இருமாநில பிரச்சனையை தீர்க்கும் விதமாக புதிய நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒரு இறுதி உத்தரவு வரும் வரையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார்.

அதில், ‘‘கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் நடந்து வருவதால் அமைச்சர்கள் அங்குள்ளனர். கர்நாடகா தேர்தல் நடந்து முடிந்தவுடன் கேபினட் கூடும். அதன்பிறகு ஒரு மாதத்தில் தென்பெண்ணையாறு விவகாரத்தில் நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படும்” என உறுதியளித்தார்.

இதையடுத்து ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்ததோடு தீர்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

You might also like