– மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
நாட்டில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட ஏராளமான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசக்கூடியது என்பது நாட்டின் மதச்சார்பின்மையை பாதிக்கும் வகையில் அமைகிறது. எனவே இதனை கடுமையான குற்றங்களாக மாநில அரசுகள் கருத வேண்டும்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.