அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள்!

அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இரவு 9 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

அப்போது, 2024 மக்களவை தேர்தல் குறித்தும், தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், தமிழக பாஜக – அதிமுக இடையே சமீபத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதோடு கர்நாடக தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுத் தந்து பாஜக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுமாறு பழனிசாமியிடம் அமித்ஷா கூறியதாகவும், பாஜக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதாக பழனிசாமி உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் அதிமுக உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், என்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

You might also like