அணில்கள் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்:
***
- அணில்கள் கைகளால் உணவு எடுத்து உண்ணும்.
அணில்கள் மேலிருந்து கீழே குதிக்கும்போது சூப்பர் ஹீரோ போல இருக்கும்.
- அணில் குட்டிகளின் தாய் உணவு தேடச் செல்லும் பொழுது மற்ற விலங்குகளால் கொல்லப்பட்டால் அதன் குட்டிகளை மற்ற அணில்கள் தத்தெடுத்து வளர்க்கும் இயல்பு கொண்டது.
- ஒரு ஆண் அணில் பெண் அணிலை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் அதன் மணத்தை வைத்து கண்டுபிடித்து விடுமாம்.
- அணில்கள் இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் மே மாதம் வரை.
கர்ப்பகாலம் மொத்தம் 44 நாட்கள், பொதுவாக ஒரு கர்ப்பத்தில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்.
- புதிதாக பிறந்த அணில் குட்டி ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.
7. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அணில்கள் வாழ்ந்துள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. - அணில்கள் 32 கிமீ வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளன. அதேபோல் 20 அடி உயரத்திலிருந்து கூட கீழே குதிக்கின்றன.