ஜெயமோகனின் ‘தனி மொழிகள்’!

மென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல் தான் அதற்கு எத்தனை பாரம்!

குழந்தைகள் கற்பிக்கின்றன, எதைக் கற்பிக்க முடியாதென.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் வாய் தவறிச் சொல்லாதிருத்தல்
வரலாற்றை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து மொழியில் புதைத்து விடுகிறோம்.

பகிரப்படுகையில் உண்மையில் பொய்யின் விகிதம் ஏறுவது தான் இலக்கியத்தின் பிரச்சினை.

சலிப்பின் கசப்பிலிருந்து மீட்டு கசப்பில்லாத சலிப்புக்கு இட்டுச் செல்பவையே பேரிலக்கியங்கள்.

பால்ய கால நண்பனிடம் நாம் உணரும் தூரம் எதனால் ஆனது?

மண்ணுக்குள் எத்தனை காடுகள் நீர் காத்து இருக்கக் கூடும்!

– 2002-ல் ‘தீராநதி’ இலக்கிய இதழில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வந்த “வாழ்விலே ஒரு முறை” தொடரின் இறுதியில் அவருடைய டைரிக் குறிப்பிலிருந்து சில.

You might also like