-பேராசியரியர் அருணன்
ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்!: சிந்து முதல் வைகை வரை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், அதாவது தமிழரின் மூதாதையர் நாகரிகம். அதற்கும், வெளியிலிருந்து வந்த ஆரிய நாகரிகத்திற்கும் உள்ள வேறுபாடுகளுக்கு அவர்கள் இயற்றிய வேதங்களே சாட்சி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆனால் சிந்துவெளி நாகரிகத்திற்கும் வைகை நாகரிகத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் அது ஆதித் தமிழர் நாகரிகமே என்கிறது.
அதுமட்டுமல்ல தமிழ் சொற்கள் பலவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானத்தின் ஊர் பெயர்களாக இருக்கும் அதிசயத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார் பாலகிருஷ்ணன்.
இந்தத் துணைக் கணடத்தின் பூர்விகக் குடி திராவிடரே என்பதற்கு ஆரியர் படைத்த இதிகாசங்களும், புராணங்களும் கூட ஆதாரம்.
அதில் எதிரிகளாகக் காட்டப்படுபவர் தொல்திராவிடரே, ஆதித் தமிழரே.
இந்த வரலாறை மறைக்கவே பாடப் புத்தகங்களில் கை வைக்கிறார்கள் பாஜகவினர்.
இன்று முகலாயர்கள், அபுல்கலாம் ஆசாத் தானே நீக்கப்பட்டிருக்கிறார்கள் என நினைத்தால், நாளை சிந்துவெளியும், வைகைவெளியும் சரித்திரத்திலிருந்து தூக்கப்படும் என்பதை மறவாதீர்.
– பேராசியரியர் அருணன்
*****
ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எழுதிய
journey of a civilization indus to vaigai புத்தகத்தின் தமிழாக்கம்
ஒரு பண்பாட்டின் பயணம்.
விலை: 3350/-
3000 + அஞ்சல் செலவு 100 = 3100/-
தேவைக்கு: 9443066449