வருவாய்த் துறையில் வழங்கப்படும் 25 வகையான சான்றிதழ் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டார்.
அதன்படி, பேரிடர் முன்னறிவிப்புகளை தெரியப்படுத்த TN-Alert என்ற கைப்பேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடது கரை 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்தப்படும் என்றும், தமிழ்நாட்டில் புதியதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்தார்.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் திருமைலாடி மற்றும் முதலைமேடு கிராமங்களில் ரூ.16 கோடியில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப்படும்.
31 மாவட்டங்களில் தற்போதுள்ள அனலாக் விஎச்எப் ரிப்பீட்டர்கள் ரூ.7.31 கோடியில் டிஜிட்டல் ரிப்பீட்டர்களாக மேம்படுத்தப்படும்.
வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் இடது கரை ரூ.14.50 கோடியில் பலப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் புதியதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்கத்தில் தொலைபேசி அழைப்பு மையம் நிறுவப்படும்.
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை அளிக்கும் பொருட்டு திருமணமாகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும்.
வட்டாட்சியர், கோட்டாட்சியர், ஆட்சியர் அலுவலங்களில் பொது மக்களுக்கு 25 வகையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் வருவாய்த் துறையின் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் இனிவரும் காலங்களில் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணைய வழி சேவை மூலம் வழங்கப்படும்.