பதவியில் இல்லையென்றாலும் மக்கள் பணியாற்றுவேன்!

ராகுல் காந்தி கேள்வி!

அதானியுடன் உள்ள நெருக்கம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பியும், அதற்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்காதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி நேற்று தன்னுடைய தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டுக்கு வந்தார்.

அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் பிரியங்கா காந்தியும் வந்திருந்தார்.

கல்பெட்டாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட சத்தியமேவ ஜெயதே என்ற பெயரில்  நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் இருவரும் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், எம்பி என்பது ஒரு பதவி மட்டும் தான் என்றும் அந்தப் பதவியிலிருந்து வேண்டுமென்றால் பாஜகவால் என்னை நீக்க முடியும் என்றும் ஆனால் மக்களிடமிருந்து என்னை பிரிக்க அவர்களால் ஒரு போதும் முடியாது என்றும் கூறினார்.

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுடனான உறவு என்னுடைய கடைசி காலம் வரை நீடிக்கும் எனக் கூறிய ராகுல்காந்தி, அதானியுடன் உள்ள நெருக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை கேள்வியும் இதுவரை அதற்கு பிரதமர் மோடி எந்த பதிலும் தரவில்லை என்றும் விமர்சித்தார்.

எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன் எனக் கூறிய ராகுல், உலக செல்வந்தர்களின் பட்டியலில் 609வது இடத்தில் இருந்த அதானி 2வது இடத்திற்கு வந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியதோடு, நாட்டிலுள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்பட சொத்துக்கள் அனைத்தும் அதானிக்கு சொந்தமாகி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

You might also like