திரைக்கலைஞர் சிவகுமார்
சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன.
இதன்மூலம் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கொந்தகையில் 2 ஏக்கரில் ரூ.18.46 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் மார்ச் மாதம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை தமிழ் மொழிக்கு இலக்கிய சேவையை இடையறாது செய்துவரும் நடிகர் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி சிவகுமார், நடிகர் சூர்யா, திருமதி ஜோதிகா சூர்யா உள்ளிட்ட குடும்பத்தினர் பார்வையிட்டனர்.
இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. வெங்கடேசனும் உடனிருந்தார். இறுதியில் அங்குள்ள பதிவேட்டில் சிவகுமார் குடும்பத்தினர் தங்களது கருத்துக்களை எழுதிச் சென்றனர்.