இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் பயிற்சி எடுத்த உதவி இயக்குனர்கள் தனித்து படங்களை இயக்கி நிறைய வெற்றிப்படங்களை தந்துள்ளார்கள்.
அந்த வரிசையில் இன்னுமொரு இயக்குனர் வருகிறார். அவர் பெயர் ஐசு ஜான்சி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் அந்த படத்தின் பெயர் நாவல்.
தலைப்பைப் போலவே படத்தையும் புதுமைப்பொலிவுடன் இயக்கி முதல் படத்திலேயே மக்களிடம் பாராட்டையும், கைதட்டலையும் உறுதியாக பெறுவார் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அருணாச்சல குமார்.
படம் முழுவதும் ஊட்டியில் வளர்ந்துள்ளது.
அறிமுக இயக்குனரான ஐசு ஜான்சி பேசும்போது, “உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும், நாம் நிஜமானவையே என்று நினைக்கும்போது, அந்த நிஜத்தை மாற்றும் ஒரு எண்ணமே நிஜமான எண்ணம் என்பதை படத்தின் மையக்கருவாக வைத்திருக்கிறேன்.
திகிலுடன், விறுவிறுப்பு, பரபரப்பு என அனைத்தும் நீக்கமற நிறைந்திருக்குமாறு திரைக்கதை அமைத்துள்ளேன்” என்கிறார்.
அத்தனையும் காணக் காத்திருப்போம்.