ஹிட்லரும் ஈபிள் கோபுரமும்!

134 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் ஈபிள் கோபுரம் இதே நாளில் தான் திறக்கப்பட்டது.

இன்று பெருந்தொகையான உல்லாசப் பயணிகளைக் கவரும் உலக சுற்றுலா தளங்களில் முக்கியமானதாக இந்த கோபுரத்தைச் சொல்லலாம்.

ஒர் ஆண்டில் இங்கு வந்து மொய்க்கும் உல்லாசப் பயணிகள் தொகை சுமாராக 7 மில்லியன். அதாவது 70 லட்சம்.

1789இல் பிரெஞ்சுப் புரட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாட 1889இல் ஒரு உலகளாவிய கண்காட்சி பாரிஸ் நகரில் திட்டமிடப்பட்டது.

அது மட்டுமல்லாது, இந்த உலகளாவிய கண்காட்சி அப்போது பொருளாதார மந்த நிலையில் இருந்த பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுசெல்லும் ஒரு வழியாகவும் கருதப்பட்டது.

இந்த கண்காட்சி குறித்து ஆலோசனை நடந்து கொண்டிருக்கும் பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஏதேனும் ஒன்று தேவை என்று அனைவருக்கும் தோன்றியது.

அப்போது கஸ்டவ் ஈபில், 1853 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் இதே போல ஒரு கண்காட்சிக்கு லாட்டிங் அப்சர்வேட்டரி என்ற மரத்தாலான ஒரு கோபுரத்தை கட்டி இருந்ததை நினைவுகூர்ந்து நாம் ஏன் ஒரு கோபுரத்தை கட்ட கூடாது என்ற எண்ணத்தை தெரிவித்தார்.

இந்த யோசனையின் விளைவாக 1884 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு பின்னர் 8 ஜனவரி 1887 அடிக்கல் நாட்டப்பட்டு 15 மார்ச் 1889 ஈபிள் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 31 மார்ச் 1889 அன்று திறந்து வைக்கப்பட்டது.

நன்றி: முகநூல் பதிவு

You might also like