எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட தங்கவாள்!

1957-ல் எம்.ஜி.ஆர் துவக்கிய சொந்தப் படத்தயாரிப்பு நிறுவனம் ‘எம்ஜியார் பிக்சர்ஸ்’. அதன் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் படம் தான் ‘நாடோடி மன்னன்’.

திரைக்கதை தயாரானதும் வசனத்தை ரவீந்திருடன் இணைந்து எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, லன்சுமண தாஸ் என்று பல பாடலாசிரியர்களின் ஒத்துழைப்பில் பாடல்கள் ஒவ்வொன்றும் பிரபலம்.

மார்த்தாண்டன், வீராங்கன் என்று இரண்டு பாத்திரங்களில் நடித்திருந்தார் எம்.ஜி.ஆர்.

அவரே மிகுந்த பொருட்செலவுடன் தயாரித்து இயக்கியிருந்தார்.

பி.எஸ்.வீர்ப்பா, சக்கரபாணி, எம்.என். நம்பியார், பானுமதி, எம்.என்.ராஜம், சந்திரபாபு, சரோஜாதேவி என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

“செந்தமிழே வணக்கம்” என்கிற பாடலுடன் ஆரம்பமான இந்தப் படம் வெளிவந்தத்தும் செம ஹிட். பல ஊர்களில் வெற்றிவிழாக்கள் நடந்தன.

மதுரையில் பெரும் வெற்றி விழா. பெரும் கொண்டாட்டம்.

எம்.ஜி.ஆரை ஒரு மன்னரைப் போல நான்கு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் அழைத்து வந்த விழாக்குழுவினர் எம்.ஜி.ஆருக்கு 110 பவுனில் தங்கவாளைப் பரிசளித்தார்கள்.

அந்தத் தங்கவாள் தான் பின்னாளில் தாய் மூகாம்பிகை அம்மனுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

அதை முன்னின்று வழங்கியவர் திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் தான்.

மக்களுக்குக் கொடுத்துச் சிவந்த கரம் அம்மனுக்கும் கொடுத்திருக்கிறது.

You might also like