பற்றாக்குறையால் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை நீடிப்பு!

 – இந்திய உணவுக் கழகம்

கோதுமை ஏற்றுமதி குறித்து இந்திய உணவுக் கழகத் தலைவர் அசோக் கே.மீனா விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், “உள்நாட்டு கோதுமை புழக்கத்தில் இன்னும் திருப்தியான நிலைமை வரவில்லை. எனவே, திருப்தியான நிலைமை வரும்வரை கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும்.

சமீபத்திய மழையால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்படாது. கோதுமை உற்பத்தி இலக்கு நிச்சயமாக எட்டப்படும். கோதுமை கொள்முதல் செய்யும் பணி நாடு முழுவதும் தொடங்கி விட்டது” எனக் கூறினார். 

You might also like