இயற்கை வாழ்வுக்கு இட்டுச் செல்லும் வெந்தயம்!

வெந்தயமும் அதன் பயன்களும்

வெந்தயம் கிட்டத்தட்ட அனைவரின் வீட்டுச் சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வெந்தயமும், அதன் கீரையும் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது.

வெந்தயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பல கூறுகள் காணப்படுகின்றன.

லூசியானா பல்கலைகழக ஆய்வு ஒன்றில் வெந்தயத்தில் இருந்து மாவு செய்து அதில் ரொட்டி சுட்டு டயபடிஸ் சிகிச்சைக்கு வந்த எட்டு பேருக்கு தினம் 2 துண்டு ரொட்டிகளைக் கொடுத்தார்கள்.

அவர்கள் டயபடிஸும், இன்சுலின் ரெசிஸ்டென்சும் கணிசமாக குறைந்தது.

ஜெய்பூர் டயபடிஸ் ரிசர்ச் செண்டரில் டயபட்ஸ் வந்த 25 பேர் ஆய்வுக்கு உட்படுத்தபட்டனர்.

பாதி பேருக்கு டயட்டும், உடல்பயிற்சியும் பரிந்துரைக்கப்பட்டன. மீதி பேருக்கு வெந்தய விதைகள் மட்டும் வழங்கப்பட்டன.

2 மாத முடிவில் உடற்பயிற்சி + டயட்டில் இருந்தவர்களை விட வெந்தய விதை உட்கொண்ட குழுவினருக்கு அதீத அளவில் சுகர் குறைந்தது.

இன்சுலின் அளவுகள் நார்மல் ஆனது. ட்ரைகிளிசரைடு சரிந்தது. நல்ல கொலஸ்டிரால் எச்.டி.எல் உயர்ந்தது.

டயபடிசுக்கு வெந்தயம் இந்த அளவு உதவ காரணம் என்ன? வெந்தயம் இன்சுலின் உடலில் சுரந்தால் என்னென்ன சிக்னல்கள் வருமோ அதை அளிக்கிறது.

உடனே உடலில் உள்ள செல்கள் க்ளுகோசை ரத்தத்தில் இருந்து அகற்றுகின்றன.

ஃபேட்டி லிவர் வியாதி:

கனடாவில் நடந்த ஆய்வு ஒன்றில் வெந்தயம் கொடுக்கபட்ட எலிகளுக்கு பேட்டி லிவர் வியாதி கணிசமாக குணமானது கண்டுபிடிக்கபட்டது.

காட்ராக்ட்:

எலிகளை இரு பிரிவாகப் பிரித்து இரு பிரிவு எலிகளுக்கும் கெமிக்கலை கண்ணில் விட்டு காட்ராக்ட் வரவழைக்கபட்டது. அதில் ஒரு பிரிவு எலிகளுக்கு வெந்தயம் வழங்கபட்டது. வெந்தயம் சாப்பிடாத எலிகளில் 72% எலிகளுக்கு காட்காரக்ட் வந்தது.

வெந்தயம் சாப்பிட்ட எலிகளில் ஒன்றுக்கு கூட காட்க்ராக்ட் வரவில்லை. வெந்தயம் சாப்பிட்ட எலிகளின் கண்களில் பெருமளவு ஆண்டி ஆக்சிடண்ட் விளைவுகள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

கிட்னியில் வரும் கற்களில் 80% கால்ஷியம் ஆக்சலேட்டால் வருபவை. வெந்தயம் சாப்பிடுவது கால்ஷியம் ஆக்சலேட் படிவதை 27% அளவு குறைக்கிறது.

வெந்தயத்தை பச்சையாக உண்பது மிக சிரமம். சமைத்து அரைத்து நீரில் கரைத்து உட்கொள்ளலாம்.

வெந்தயத்தை தயிருடன் உட்கொள்வது ஏதோ காரணத்தால் அதன் விளைவுகளை மட்டுபடுத்திவிடுவதால் வெந்தயம் உண்பதற்கு 2 – 3 மணிநேரம் முன்னும், பின்னும் பால் பொருட்களை உட்கொள்ள வேண்டாம்

நன்றி: அமுதசுரபி

You might also like