கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகா சட்டமன்றத்துக்கு மே மாதத்தில் தேர்தல் வரவுள்ளதால் அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு சிறுபான்மையினருக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை நீக்கி, இடஒதுக்கீட்டில் சிறு மாற்றங்களைச் செய்தது.
சிறுபான்மையினருக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதேபோல, கர்நாடகா அரசு பட்டியலின மக்களுக்கான 17 சதவீத இடஒதுக்கீட்டிலும் சில மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பரிந்துரையை ஒன்றிய அரசு வழங்கியது. பட்டியலின மக்களை வகைப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகா அரசின் இந்த முடிவுக்கு பஞ்சாரா பிரிவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடைபெற்ற பேரணியின்போது எடியூரப்பா வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அவர்கள் தடுப்புகளை மீறி எடியூரப்பா வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
எடியூரப்பா வீடு மீது ஏறி அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பாஜக கொடியை அகற்றி, தங்கள் கொடியை பஞ்சாரா சமூகத்தின் ஏற்றினர்.
அதோடு எடியூரப்பா மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையின் உருவம் பொரித்த போஸ்டர்களை எரித்தனர். இதனால் சிகாரிபுரா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.