இசையமைப்பாளராகும் பாடலாசிரியர்!

தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் கார்த்திக், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.

உதித் நாராயணன் மற்றும் ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்கள் பங்களிப்பை கொடுத்துள்ள இந்தப் படத்தின் இசை ஆல்பம் நாளை ட்ரெண்ட் மியூசிக்கின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் 150க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்படுகிறார்.

சத்யராஜின் கதாபாத்திரத்தை சுற்றிவரும் விதமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீபதி, நியா, ரெய்னா காரத் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையாள நடிகை நியா மற்றும் மும்பையை சேர்ந்த மாடலான ரெய்னா காரத் இந்தப் படத்தின் கதாநாயகிகளாக தமிழ் திரையில் அறிமுகமாகின்றனர்.

சூது கவ்வும், இன்று நேற்று நாளை மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களுக்கு பிரமிப்பூட்டும் திரைக்கதை எழுதி பாராட்டு பெற்ற கருந்தேள் ராஜேஷ் வசனங்களை எழுதியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் ஜோமோன் பிலிப், “ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக உருவானாலும், படத்தில் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன” என்றார்.

You might also like