நாகேஷ்: தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம்!

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் கதையை இயக்குநர் ஸ்ரீதர் கேட்டார். அதற்கும் ஜெயகாந்தன் மறுத்து விட்டார். யாருக்காக அழுதான் மிகக்குறைந்த செலவில் 1966-ல் ஜெயகாந்தனால் எடுக்கப்பட்டது.

நாகேஷ், திருட்டுமுழி ஜோசப் பாத்திரமேற்று திறம்பட நடித்திருந்தார். கே.ஆர். விஜயா, பாலையா, சகஸ்ரநாமம் முதலானோர் நடித்த படம்.

நடிகர் நாகேஷ் குறித்து உயர்வான அபிப்பிராயம் கொண்டிருந்த ஜெயகாந்தன் அவரைப் பற்றி ஒரு நூலில் இவ்வாறு பதிவு செய்கிறார்;

“நாகேஷின் நடிப்பு தமிழ்த்திரைப்பட உலகிற்கு, இதன் தகுதிக்கு மிஞ்சிய ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லவேண்டும்.

நல்லவேளையாக டைரக்டர்களின் ஆளுகை தன்மீது கவிழ்ந்து அமிழ்த்தி விடாதவாறு பாதுகாத்துக்கொள்ளும் அதேசமயத்தில் ஒரு நடிகனுடைய எல்லைகளை மீறி நடந்து கொள்ளாதவர்.

தனது பாத்திரத்தைத் தன் கற்பனையினால் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எதிர்பாராத முறையில் மிகவும் சிறப்பாக அமைத்துக் கொள்கிற ஒரு புதுமையான கலைஞராகவும் இருந்தார்.

நன்றி: வணக்கம் லண்டன்.காம்

You might also like