– ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
கோடைக்காலத்தின் வழக்கமான வெப்பத்தை விட இந்த ஆண்டு கூடுதலான வெப்பம் நீடிக்கும் என்பதால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் ஆங்காங்கே சில நகரங்களில் இப்போதே மே மாத அளவிற்கு கடும் வெப்பம் நிலவத் தொடங்கியுள்ளது.
பருவநிலை மாற்றம், எல் நினோ போன்றவற்றால் இந்த ஆண்டு இந்தியாவில் கோடைக்கால வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் கோடைக்காலத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கோடைக்காலத்தின் வழக்கமான வெப்பத்தை விட இந்த ஆண்டு கூடுதலான வெப்பம் நீடிக்கும் என்பதால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா எழுதிய கடிதத்தில், “குடிநீர் பம்புகளை பழுது நீக்குதல், வனப்பகுதியில் தீயணைப்பு முன்னேற்பாடுகள், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தல் கோடைக் கால நோய்களுக்கான மருந்துகளை கைவசம் வைத்திருத்தல் போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.