விரைவில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்!

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ரவீந்திரநாத் குமார் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்த ஒன்றிய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, ”அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு தொல்லியல் துறைக்கு 5.25 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. அருங்காட்சியகம் கட்ட சிறந்த கட்டடக் கலை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதோடு ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் மிக குறுகிய காலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது” எனக் கூறினார்.

You might also like