இந்தியாவிலும் பரவத் தொடங்கிய இன்புளூயன்சா!

இந்தியாவில் எச்3என்2 என்ற இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் கடந்த சில வாரங்களாகவே வேகமாக பரவி வருகிறது. இது கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், எச்3 என்2 இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எச்3என்2  வைரஸ் காய்ச்சலினால் சிறுவர்கள் மற்றும் இணை நோய் உடைய வயதானவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. வைரஸ் காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பருவ காலங்களில் ஏற்படும் இன்புளூயன்சா என்பது சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, இந்த இன்புளூயன்சா உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த சவாலை சமாளிக்க மாநில அளவிலான கண்காணிப்பு அதிகாரிகள் முழுவதும் தயாராக உள்ளனர்.

இதனிடையே ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துறை சார்ந்த அதிகாரிகளுடன் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் வேகமாக பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு மாநிலங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

You might also like