அந்த நாள் குழந்தை நட்சத்திரங்கள்!

களத்தூர் கண்ணம்மா (1960) படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன் பார்த்தால் பசி தீரும் (1962) படத்தில் இரட்டை வேடம்!

பாதகாணிக்கை (1962), வானம்பாடி (1963), ஆனந்த ஜோதி (1963) படங்களில் நடித்த பின் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.

ஏனோ வாய்ப்பு தான் இல்லையோ அல்லது வேறு காரணமோ.

டி.கே.எஸ் நாடகக் குழுவில் பயிற்சி.

களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலுடன் நடித்த தசரதன் ‘நானும் ஒரு பெண்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகனாக நடித்திருப்பார்.

மேஜர் சந்திரகாந்த் படத்தில் நாகேஷுடன் ‘கல்யாண சாப்பாடு போடவா! தம்பி கூடவா!’ பாடலில் நடித்தவர்.

நினைவில் நின்றவள், வா ராஜா வா என்று நினைவில் நிற்கும்படி நடித்தவர் தான் தசரதன்.

“என்னோடு களத்தூர் கண்ணம்மாவில் நடித்த தசரதன் இன்று நான் காரில் போகும்போது ரோட்டில் நடந்து போகிறார்”  என்று பல வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் வருத்தப்பட்டார்.

தசரதன் நடித்த மேலும் சில படங்கள்:

மனசாட்சி [1969], நினைவில் நின்றவள் [1967], கண்காட்சி [1971], பிஞ்சு மனம் [1975], ஒரு கை ஓசை [1980], நவக்கிரகம் [1970], அகத்தியர் [1972], அவன் பித்தனா [1966], வல்லவன் ஒருவன் [1979], நாகமலை அழகி [1962].

You might also like