சீனாவை எச்சரிக்கும் இந்தியாவின் சிந்துகேசரி நீர்மூழ்கிக் கப்பல்!

தென்சீன கடல் பகுதியில் நிலவி வரும் பதற்றத்திற்கிடையே, இந்தியாவின் ஐஎன்எஸ் சிந்துகேசரி நீர்மூழ்கிக்கப்பல், முதல்முறையாக இந்தோனேசியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.

மூவாயிரம் டன் எடை கொண்ட டீசல் மின்சார நீர்மூழ்கிக்கப்பலான சிந்துகேசரி, இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் சுந்தா ஜலசந்தி வழியாக பயணித்து ஜகார்த்தாவை சென்றடைந்தது.

இந்தோனேசியாவின் சிறப்பு பொருளாதார மண்டலமான நட்டுனா கடல் பகுதிக்குள், சீன கடலோர பாதுகாப்பு படை கப்பல் ரோந்து சென்ற சில வாரங்களில், ஐஎன்எஸ் சிந்துகேசரி நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1988-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட இந்த நீர் மூழ்கிக் கப்பல், பின்னர் 1197 கோடி ரூபயில் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டு மீள் உருவாக்கம் பெற்றது.

கடந்த 2018ஆம் ஆண்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஐஎன்எஸ் சிந்துகேசரியின், சேவை 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

You might also like