வரிக்காக மார்பகங்களை அறுத்துக் கொடுத்த வீரப்பெண்!

திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி காலத்தில் பெண்களுக்கு மார்பக வரி போடப்பட்டிருந்தது.

இப்படிப் போடப்பட்ட சூழ்நிலையில் 1803-ம் ஆண்டு கேரளாவில் உள்ள சேர்த்தலை கிராமத்தில் நங்கேலி என்ற பெண்ணிடம் மார்பக வரி கேட்டான் தண்டல்காரன்.

வீரப்பெண் நங்கேலி வரி கொடுக்க முடியாது.

வேண்டும் என்றால் என் இரு மார்பகங்களையும் எடுத்துச்செல் என்று கூறியதோடு, தனது இரு மார்பகங்களையும் அறுத்து, வாழை இலை மீது வைத்து தண்டல்காரனிடம் கொடுத்தாள்.

இதனால், அதிக ரத்தம் வெளியேறியதால் உயிரை விட்டாள் அந்த பெண்.

இதுபற்றி அறிந்த அவள் கணவன் சிறுகண்டன் இறந்த மனைவியின் சிதையின் மீது விழுந்து, உடன்கட்டையேறி உயிர் துறந்தான்.

கேரளாவில் இன்றும் அந்த இடம் ‘முலச்சி பரம்பு’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இந்த சம்பவம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த தோள்சீலை போராட்டத்துக்கான ஒரு தொடக்கப்புள்ளி என்று கூறப்படுகிறது.

தாலி அறுத்தான் சந்தை பெயர் வந்தது எப்படி

பல்வேறு கட்ட போராட்டங்களின் வாயிலாக பெண்கள் மார்பகங்களை மறைக்க குப்பாயம் அணிய அனுமதிக்கப்பட்டது.

அதனால் சந்தை போன்ற பொது இடங்களில் ரவிக்கை அணிந்து வந்த பெண்களின் ரவிக்கையை கிழித்தும், தாலிகளை அறுத்து ஆதிக்க வர்க்கத்தினர் அவமானப்படுத்தினர்.

அவ்வாறு தாலி அறுக்கப்பட்ட அகஸ்தீஸ்வரத்துக்கு அருகில் உள்ள சந்தைக்கு தாலி அறுத்தான் சந்தை என்று பெயர் வந்ததாக அப்பகுதியில் உள்ள முதியோர்கள் கூறுகிறார்கள்.

நன்றி தினந்தந்தி 17.2.23

You might also like