சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறையை கொண்ட நாடு சவுதி என்ற பழைய அடையாளத்தை அழிக்க சவுதி அரேபியா தொடர்ந்து முயன்று வருகிறது.
இந்த நிலையில், விண்வெளிக்கு முதல் முறையாக விண்வெளி வீராங்கனையை சவுதி அரேபியா அனுப்ப உள்ளது. இதனை சவுதி அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.
பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆட்சிக்குப் பின் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்தார். பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சவுதி பெண் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருக்கிறார்.