உலகிலேயே 3-வது பெரிய விமானப் போக்குவரத்து சந்தை!

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது.

இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. புதிய விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இதில், டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், ரத்தன் டாடா, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “உலகிலேயே 3-வது பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா விரைவில் மாறும்.

கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-ல் இருந்து 147 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் நமக்கு 2,000 விமானங்கள் தேவைப்படும்” என்றுக் கூறினார்.

You might also like