– துரிதமாக செயல்படும் திறன் மேம்பாட்டுக் கழகம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்ற ஆண்டு முதல் பட்ஜெட்டின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கும், கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக, ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி நடத்தப்பட்டது.
ஆங்கில பேச்சாற்றல் பயிற்சியை முடித்த மாணவ மாணவியர், “நாங்கள் அச்சமின்றி அன்றாட வாழ்வில் கலந்துரையாட உதவிகரமாக இருக்கின்றது.
இந்த பயிற்சியினால் ஆங்கிலத்தில் பேசுவதற்கான அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் முழுமையாக உணர்ந்ததால், பயமின்றி ஆங்கிலத்தில் உரையாடுகிறோம்.
உலகளாவிய வேலை வாய்ப்புகளை நாங்கள் ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
எங்களுக்கு வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும் மேலும் வேலை வாய்ப்புகளை தேடிச் செல்லும்போது எவ்வித தயக்கமும் என்று தேர்வுகளை எதிர்கொள்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்” என பயன்பெற்ற மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.
மேலும், “பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்த முதலமைச்சர் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்கள்.
இந்தத் திட்டம் ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் முழுமையாக சென்றடைய வேண்டுமென்று, முழு மனதோடு, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களின் மேற்பார்வையில், திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி கல்வியியல் இயக்கத்தின் மூலமாக மதிப்பீடு செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற மாணவர்களின் நீண்ட நாள் கனவினை திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் நிறைவேற்றியுள்ளார்.
இந்தப் பயிற்சிகளை வழங்கிய ஸ்டூடன்ட் சாப்ட்வேர் பயிற்சி நிறுவனத்திற்கும் மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கின்றனர்.