-ஒன்றிய அரசு அறிவிப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2023-2024ம் ஆண்டு நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மார்ச் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தத் தேர்வுகள் தாமதாக நடைபெற உள்ள நிலையில், மீண்டும் இதைத் தள்ளி வைத்தால், மாணவர்களுக்கு குழப்பமான மனநிலை நிலவும் என்பதால் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அமைச்சர் அப்போது தெரிவித்தார்.