எம்ஜிஆருக்கு திருப்தி இல்லாமல் போன கண்ணதாசன் பாடல்!

நினைவில் நிற்கும் வரிகள் :

1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்காக கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் எம்.ஜி.ஆருக்குத் திருப்தி இல்லை.
புலமைப்பித்தனும் வாலியும் எழுதிப் பார்த்தார்கள்.

இறுதியில் மருதகாசியை அழைத்தார்கள். இவர் கண்ணதாசன் எழுதியதை வாங்கிப் பார்த்து, “அண்ணே! நல்லாத்தானே இருக்கு” என்றார்.

“இன்னும் அழுத்தமாக கருத்தோடு இருக்க வேண்டும்” என்று எழுதச் சொன்னார்.

“கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்” – என்று எழுதிக் கொடுத்தார் மருதகாசி.

எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப் போனது.

புரட்சித் தலைவருக்கு மிகவும் பிடித்துப் போன பாடல் இதுதான்…

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்,
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்,
பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்

(கண்ணை…)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை

(கண்ணை…)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்

(கண்ணை…)

You might also like