கடும் பனிப்பொழிவால் உறையும் இமாச்சல்!

கடும் பனிப்பொழிவு காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட சுமார் 150 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பூஜ்ய டிகிரி வெப்பநிலை நிலவியதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, சாலைகளில் காட்சித்திறன் குறைந்துள்ளது. இதனால், முக்கிய மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட லாஹவுல் மற்றும் ஸ்பிதியில் அதிகபட்சமாக 130 சாலைகள், சம்பாவில் ஒன்பது, குலுவில் ஐந்து, காங்க்ரா மற்றும் சிம்லாவில் தலா இரண்டு மற்றும் 200 டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் 8 நீர் வழங்கல் திட்டங்கள் தடைபட்டுள்ளதாக அவசரக்கால மையம் தெரிவித்துள்ளது.

கோக்சரில் 3.4 செமீ பனியும், குகும்சேரி மற்றும் கீலாங்கில் முறையே 1.7 செமீ மற்றும் 1 செமீ பனிப்பொழிவும் பதிவாகியுள்ளன. வானிலை அறிக்கையின்படி, சம்பாவில் உள்ள பார்மூரில் 12.3 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

You might also like