ரிசர்வ் வங்கி அறிவிப்பு
அதானி குழுமப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவின் வங்கித் துறை எந்த ஒரு தடுமாற்றமுமின்றி சீராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதானியின் குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவின் வங்கித் துறை எந்த ஒரு தடுமாற்றமுமின்றி சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மத்திய வங்கி வங்கித் துறையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும், வங்கிகளின் நிதி நிலைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்றும் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றவர்களை மத்திய வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு கண்காணிப்பாளராகவும், வங்கிகளை ஒழுங்குப்படுத்தும் அமைப்பு என்கிற முறையிலும் இந்திய வங்கிகளையும், அதன் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.