ஒழுக்கத்தை மீறும் அதிகாரிகள் மீது ராணுவ நடவடிக்கை!

திருமணமான பெண்ணுடன் உறவு வைத்து கொள்வது குற்றமாகும் என்ற இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 497-ஆவது பிரிவை 2018-இல் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த தீா்ப்பில் இருந்து ராணுவத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

குடும்பத்தினரை பிரிந்து வெகு தொலைவில் பணியாற்றும் ராணுவத்தினா் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட உச்சநீதிமன்ற உத்தரவு வழிவகுக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் மனுவில் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடும் ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அதோடு, 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு, ராணுவ சட்டத்தை கட்டுப்படுத்தாது என்றும் அரசியல் சாசன அமா்வு தெளிவுபடுத்தியது.

You might also like