மொழி காக்க உயிரிழந்தவர்களின் நினைவு நாள்…!

தமிழகத்தில் வெவ்வேறு கட்டங்களாக இந்தித்திணிப்புக்கு எதிரான மொழி காக்கும் போராட்டங்கள் நடந்திருந்தாலும், திருச்சிக்கு அருகில் உள்ள கீழப்பழுவூரில் அதிகாலை நேரத்தில் நாலரை மணிக்குத் தன்னுடைய தலையில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு எரித்துக் கொண்ட சின்னச்சாமிக்கு அப்போது 27 வயது.

திருமணமான அவர் உயிரிழந்தபோது எழுப்பிய முழக்கம்..

“தமிழ் வாழ்க… தமிழ் வாழ்க”

அன்று உயிர்நீத்த சின்னச்சாமிக்குப் பிறகு நூற்றுக்கணக்கான உயிர்கள் மொழிப்போராட்டத்தில் பறிபோயிருக்கின்றன.

மொழிப் போராட்டத்தில் நடராசன், தாளமுத்து என்று பலர் தன்னுயிரைக் கொடுத்திருந்தாலும், முதலில் தீக்குளித்து இறந்த சின்னச்சாமியின் நினைவுநாளைத் தான் மொழிப் போர் தியாகிகள் தினமாக அனுசரித்துக் கொண்டிருக்கிறோம்.

“உடல் மண்ணுக்கு.. உயிர் தமிழுக்கு” என்ற வாசகத்திற்கு உயிருட்டிய அந்தத் தியாகிகளுக்கு வணக்கங்கள்…!

You might also like