ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பிற்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்து வருகிறது.
இந்த ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் முப்படைகள் சார்பிலும் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெறவுள்ளன.
கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், ஓராண்டிற்குப் பிறகு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி கலந்து கொள்ளவுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டின் வீரத்தையும், பெருமையையும் குறிக்கும் வகையில் ஔவையார், வேலு நாச்சியார் உள்ளிட்டோரின் சிலைகளும், பாரம்பரிய கலைகளான கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் வடிவமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.