உ.பி.யில் கடும் குளிர்: ஒரே நாளில் 25 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர்.

நொய்டா, காஜியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ, பரேலி மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பகலிலும் குறைந்த வெப்பநிலையே பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளிலும், கிழக்குப் பகுதியில் சில இடங்களிலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது.

இந்த நிலையில் ஜனவரி 5ம் தேதி இருதய நோய் பாதிக்கப்பட்ட 723 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் அதிக குளிர் தாங்கமுடியாமல் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர 18 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, இந்த காலநிலையில் அனைவரும் தங்களை குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் எனவும், முடிந்தவரை வெளியே செல்லாமல், பாதுகாப்பாக வீட்டிற்குள் இருப்பது நல்லதென்றும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

You might also like