நூல்களை வாசிக்காத ஒரு மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு!

ஆம்பூரைச் சேர்ந்த நண்பர் அசோகன் ஒரு தீவிர வாசகர் பற்றி எழுதியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் குப்புசாமி கணேசன்.

இதுபற்றிப் பேசும் அவர், “இவருடைய விரிவான வாசிப்பைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார்.

ஆம்பூரில் சமையல் எரிவாயு ஏஜென்சி நடத்தும் அசோகன் பெரும்பாலும் தமிழ் நூல்களைப் படிப்பதேயில்லை என்பது மட்டுமே அவரிடம் நான் காணும் குறை.

புதிதாக எந்த ஒரு எழுத்தாளரைப் பற்றி குறிப்பிட்டாலும் அந்த எழுத்தாளரின் குறைந்தது ஒரு புத்தகத்தையாவது ஏற்கனவே படித்தவராக இருப்பார்.

அதுவரை படித்திருக்காத எழுத்தாளர் என்றால் அடுத்த ஒரு வாரத்துக்குள் அமேசான் மூலமாக அவருடைய எல்லா புத்தகங்களையும் வாங்கிப் படித்துவிட்டு என்னை அழைத்து ஒவ்வொரு நூலைப் பற்றியும் விரிவாகப் பேசுவார்.

படிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதலாமே என்றால் மழுப்பலாக சிரித்துவிட்டு “எதுக்கு எழுதணும்? உங்களை மாதிரி நண்பர்களோடு பேசுவது மட்டுமே போதும்” என்பார்.

அவருடைய ஃபேவரைட் ஏரியா ஜெர்மனி. அதுவும் உலகப் போருக்குப் பிந்தைய யூதர்களின் அனுபவ நூல்கள். W G.Sebald பற்றி நாள் முழுக்க பேசுவார்.

“Primo Levi, Gunter Grassலாம் நீங்க மொழிபெயர்க்க மாட்டீங்களா?” என்பார்.

கடந்த ஒரு வருடத்தில் என்னவெல்லாம் படித்தீர்கள் என்று கேட்டதற்கு pdfஇல் ஒரு லிஸ்ட் அனுப்பியிருக்கிறார் (வாசித்து முடித்த தேதிக் குறிப்போடு). 2002ல் மொழிபெயர்ப்பில் ஈடுபடத் தொடங்குவதற்கு முன்பு நானும் அசோகனைப் போலத்தான் இருந்தேன்.

இப்போது நேரம் முழுவதையும் மொழிபெயர்ப்பே எடுத்துக்கொண்டு படிக்காத புத்தகங்களின் அடுக்கு உயர்ந்துகொண்டே போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார் குப்புசாமி கணேசன்.

You might also like