எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்திய அணி!

2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதிவரை நடைபெற இருக்கிறது.

குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளிலும் ஐந்து ஐந்து அணிகள் பங்குபெற்று விளையாடவிருக்கின்றன.

குரூப் பி பிரிவில் பங்குபெற்று இருக்கும் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்திய அணி இருக்கும் பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டிஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

பிப்ரவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தனது முதல் போட்டியை ஆட இருக்கும் இந்திய அணி, முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அணியுடன் மோதவிருக்கிறது.

போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. மற்ற 3 போட்டிகளில் வெஸ்ட் இண்டிஸ், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளோடு மோத இருக்கிறது.

ஆல்ரவுண்டர் ஹர்மன்ப்ரீத் கார் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 18 வயது நிரம்பிய ஷபாலி வர்மாவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே 14 மாத இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். எனவே இந்தத் தொடர் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like