ஜெர்மனியில் வசிக்கும் ஆய்வாளர் சுபாசினி, கூடலூர் மங்களாதேவி கோயிலுக்குச் சென்ற அனுபவத்தை எழுதியுள்ளார். அந்த பயணக் குறிப்புகள் இதோ…
கூடலூர் மங்களாதேவி கோயில் சிலப்பதிகாரம் கூறும் கண்ணகியின் தொன்மத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கும் கேரளாவின் எல்லையை ஒட்டிய ஒரு பகுதி.
மங்களாதேவி கோயில் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் பொதுமக்களுக்காகத் திறக்கப்படுகிறது என்பதால் இன்று அங்கு செல்ல முடியவில்லை என்றாலும்,
அதன் அடிவாரத்தில் தமிழ்நாட்டின் எல்லையில் இருக்கும் இந்த மங்களாதேவி கோயிலுக்கும் அப்பகுதியில் வாழும் பளியர் சமூக மக்கள் வாழ்கின்ற பளியங்குடி பகுதிக்கு சென்று வந்தது மறக்க முடியாத ஒரு அனுபவம்.
இக்கோயிலைச் சுற்றி பல்வேறு சடங்குகள் மற்றும் தொன்ம வழிபாடுகள் நிறைந்திருக்கின்றன.
மதுரையை எரித்த பின்னர் கண்ணகி தேனி வழியாக நடந்து வந்து இப்பகுதி வரை வந்து பிறகு இங்கிருந்து வானுலகம் சென்றார் கண்ணகி என்ற ஒரு கதை உலவுகிறது என்பதை நாம் அறிந்திருக்கின்றோம்.
இலங்கைக்கு வந்து சேர்ந்து பிறகு இலங்கையில் வாழ்ந்துமுடிந்தார் என்ற ஒரு தொன்மக்கதையும் இருக்கிறது.
எது எவ்வாறாயினும் இப்பகுதி இன்று மக்களால் கண்ணகி எனும் தமிழ் தெய்வத்தின் சிறப்பினை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தலமாக இருக்கின்றது.