இந்தியா மீது போர்த்தொடுக்கத் தயாராகி வரும் அண்டை நாடுகள்!

– ராகுல்காந்தி எச்சரிக்கை

இந்திய ஒற்றுமை பயணத்தின் போது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை சந்தித்து பேசிய நிகழ்வை ராகுல்காந்தி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

அதில் பேசியுள்ள ராகுல் காந்தி, “இந்தியா இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. நம் ராணுவத்தின் மீது எனக்கு மரியாதையும் மிகுந்த அன்பும் பாசமும் உண்டு.

முன்பு, சீனா, பாகிஸ்தான் என நமக்கு 2 எதிரிகள் இருந்தனர். அந்த எதிரிகளை தனித்தனியாக வைத்திருப்பது நமது கொள்கையாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி சீனாவும், பாகிஸ்தானும் ராணுவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக ஒன்றாக செயல்படுகின்றன.

இரு நாடுகளும் நமக்கு எதிராக தயாராகி வருகின்றன. ஒருவேளை இந்தியாவுக்கு எதிராக போர் நடந்தால், அதில் சீனாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக இல்லாமல், சேர்ந்து நம்மை தாக்கும். அதனால்தான் ஒன்றிய அரசு அமைதியாக இருக்கக் கூடாது.

இந்த விவகாரத்தில் நாம் 5 ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு அதை செய்யத் தவறி விட்டது“ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

You might also like